கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் இனவெறி: கிறிஸ் கெய்ல் சொல்கிறார்

0

வெஸ்ட் இண்டீசின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் கருப்பர் இனத்தைசேர்ந்தவன் என்பதால் பல தாக்குதல்களை சந்தித்து உள்ளதாக கூறியுள்ளா, மற்றும் ஜார்ஜ் பிளாயிட் கருப்பின தாக்குதலுக்கு கருத்து தெரிவித்துள்ளார்

ஜார்ஜ் பிளாய்ட் :

கடந்த மே 28 ஆம் தேதி அமெரிக்காவில் கார்பெற் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் போலீசாரால் சந்தனத்தின் பேரில் கொலை செய்யபட்டையடுத்து அமெரிக்காவில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.

கிறிஸ் கெய்லயின் இன்ஸ்டாகிராம் பதிவு:

இச்சம்பவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ்இன் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:மற்றவர்களை போல கறுப்பு இன மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை முறை கிடையாது. கறுப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். நான் உலகம் முழுக்க சுற்றியுள்ளேன். நான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்பதால், என் மீதும் இன வெறுப்பை மறைமுகமாகவும, நேரடியாகவும் வெளிப்படுத்தினார்கள்.இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு. அணி வீரர்களுக்குள் கறுப்பு இனத்தவர் என்பதால், கடைசி வாய்ப்புதான் கிடைக்கும். கறுப்பு சக்திமிக்கது. கறுப்பு எனது பெருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here