‘முழுமதி அவளது முகமாகும்…’பாடலுக்கு வசீகரிக்கும் அழகில் ரீல்ஸ் செய்த நாம் இருவர் நமக்கு இருவர் நாயகி!!!

0

விஜய் டிவியின் பிரபல சீரியல் மூலம் ரசிகர்கள் முன் முகத்தை காட்டியவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். தற்போது அவர் ‘முழுமதி அவளது முகமாகும்…’ பாடலுக்கு செம அழகில் ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி சீரியல் மூலம் ஜோதியாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ரச்சித்தா. அந்த சீரியலில் மிக எதார்த்தமாக மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து  இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம் போன்ற பல சீரியல்களில் நடித்து உள்ளார். இவரின் இந்த ஹிட் சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறியவர்.

இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியல் மிக விறுவிறுப்பாகவும் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து ஜோதா அக்பர் படத்தில் இடம் பெற்ற ‘முழுமதி அவளது முகமாகும்’ என்ற பாடலுக்கு வசீகர அழகில் ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here