Tuesday, August 3, 2021

இசையமைப்பாளர் டி.இமான் செய்த காரியம்…!குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!அந்த மனசுதான் சார் கடவுள்!!!

Must Read

பல ஹிட் பாடல்களை தந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள். தற்போது தான் இசையமைக்கும் பிரபு தேவா படத்தில் ஒரு பாடல் பாட மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவருக்கு வாய்ப்பளித்து உள்ளார். இந்த தகவலை அறிந்த அவரின் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

திரைத்துறையில் பல துள்ளல் மற்றும் மெல்லிய பாடல்கள் பலவற்றிற்கு இசை அமைத்தவர் டி.இமான். அவரின் விசில் படத்தின் இசை மூலம் மக்கள் முன் தெரியவந்தவர். அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். அவரின் இசையில் உருவான  பல பாடல்கள் பல விருதுகளை பெற்றுள்ளது. மேலும் பலரால் முணுமுணுக்க படும் வகையில் அவரின் இசை அமைய பெற்று இருக்கும்.

இந்நிலையில் இவர் தற்போது அண்ணாத்த, சூர்யா 40, பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதையடுத்து பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் படத்தில், கேரளாவை சேர்ந்த 13 வயதான ஆதித்யா சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்து உள்ளார்.

இந்த சிறுவன் முதலில் சமூக வலைத்தளங்களில் தொடங்கி பல மேடைகளில் தனது திறமையை நிரூபித்தவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இந்நிலையில் அவரின் திறமையை அறிந்த டி.இமான் அவர்கள் அந்த சிறுவனுக்கு இந்த வாய்ப்பளித்து உள்ளார். மேலும் இந்த பாடலில் இவருடன் சேர்ந்து  சஹானா என்ற சிறுமியும் பாடியுள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரின் ரசிகர்கள் டி.இமான் அவர்களுக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -