Tuesday, August 3, 2021

அரசியலுக்கு நோ நோ சொன்ன ரஜினி…!சூப்பர் ஸ்டார் அறிவித்த ஷாக் நியூஸ்!!!

Must Read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த சில நாட்களுக்கு முன் தான் அமெரிக்கா சென்று உடல் நல பரிசோதனை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அதன் பிறகு அவரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவர் இன்று ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து, இனி அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளார்.

ஒரு நடத்துனராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகர் ரஜினி அவர்கள். தற்போது தமிழ் திரையுலகில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர். தனக்கென ஒரு தனி  ஸ்டைல், தனக்கென ஒரு நடிப்பு பாணி வைத்து முன்னேறியவர். தமிழ் மட்டும்மலால் இவரின் புகழ் நாடு எங்கும் பரவி உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் அரசியல் வரப்போவதாக தெரிவித்தார். இதனிடையே  பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அவரால் அரசியலில் ஈடுபட முடியவில்லை.

இந்நிலையில் மீண்டும் அரசியலில் வருவதா..? இல்லையா..? என்பது குறித்து தனது மன்ற  நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை செய்துள்ளார். இதையடுத்து அவர் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்து உள்ளார். அந்த அறிக்கையின் படி, இனி வரும் காலங்களில் அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் தனக்கு இல்லை. இதனால் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு இனி அது ரஜினி ரசிகர் மன்றமாக மட்டும் இருந்து தன் பணியை தொடரும் என அறிவித்து உள்ளார். இது அவரை அரசியலில் எதிர்பார்த்த ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை தந்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -