விஜய் டிவியில அடுத்து இந்த ஷோலதான் என்னை பார்க்கமுடியும் – புகழ் வெளியிட்ட தகவல்!!

0
மனைவியுடன் எடுத்த படு அழகான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி புகழ் - வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவியால் தற்போது வரை புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பலர். இந்த லிஸ்டில் சிவகார்த்திகேயன், பிரியா பவானி ஷங்கர், ரோபோ சங்கர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்.

புகழ், சாதாரண காமெடியனாக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். ஆரம்பத்தில் இவரின் திறமையை பெரிதாக சின்னத்திரை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர் இவருக்கு கிடைத்த பம்பர் பரிசு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. முதல் சீசனிலேயே இவரின் காமெடி வசனங்களும், டைமிங்கில் இவர் அடிக்கும் பஞ்ச் டயலாக்குகளும் ரசிகர்களை கவர்ந்தன.

பின்னர் சீசன் 2 விலும் கலந்துகொண்டு அசத்தினார். இந்நிலையில் சினிமாவிலிருந்து இவருக்கு பல வாய்ப்புகள் வருவதால் விஜய் டிவியில் இருந்து சிறிது நாட்களுக்கு பிரேக் விட்டார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி வேறு அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிப்பரப்பாக இருக்கிறது. எனவே புகழ் அதில் கலந்து கொள்ள போகிறார் என்ற செய்திகளும் வந்தது.

தற்போது இதை பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பிக்பாஸ் 5ல் வருகிறீர்களா என புகழிடம் கேக்கப்பட்ட கேள்விக்கு அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கண்டிப்பாக இல்லை ஆனால் குக் வித் கோமாளி 3 இல் நான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here