பாக்கியலட்சுமி சீரியலில் இணையும் பிக் பாஸ் பிரபலம்… Best Mom விருதை வெல்லும் பாக்கியா!!!

0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இனியாவின் இனியாவின் ஸ்கூலில் நடைபெறும் அன்னையர் தின விழா போட்டிக்கு நடுவராக பிரபல முன்னணி நடிகை ரேகா வருகிறார். மேலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி Best Mom என்ற விருதையும் பெறுகிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் ஸ்கூலின் அன்னையர் தின விழாவில் நடக்க இருக்கும் வெவ்வேறு வித போட்டிகளில் கலந்து கொள்ள பாக்கியா இனியாவுடன் செல்கிறார். இருப்பினும் பாக்கியாவை நம்பாத இனியா ஒரு வித பதற்றத்துடன் இருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகிய ப்ரோமோவில், பள்ளியில் நடைபெறும் விழாவிற்கு நடுவராக பிரபல நடிகை ரேகா வருகிறார்.

இந்நிலையில் பாக்கியா மேடையில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்துகிறார். அந்த நேரத்தில் ரேகா பாக்கியாவிடம் ஒரு சில கேள்விகள் கேட்கிறார். அதற்கு பாக்கியா அனைவரும் அசரும் வகையில் ஒரு பதிலை கூறுகிறார். அதன் பின்னர் Best Mom 2021 என்ற விருதை பெறுபவர் என கூறி பாக்கியாவின் பெயரை கூறுகிறார்கள்.

இதை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் இனியா இதையடுத்து அந்த விருதை வழங்க மேடைக்கு வரும் ரேகா, அம்மான்னா  அது உங்கள மாதிரி தான் இருக்கனும் என கூறிக்கொண்டு, பாக்கியா மற்றும் இனியாவுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொள்கிறார். இதனுடன் அந்த ப்ரோமோ முடிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here