ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த கட்டணத்தை பயணிகளிடம் வழங்க முடிவு.., தென்னக ரயில்வே அறிவிப்பு!!!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த கட்டணத்தை பயணிகளிடம் வழங்க முடிவு.., தென்னக ரயில்வே அறிவிப்பு!!!
வங்க கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டி போட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் 650 ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை நான்கு நாட்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் மிகவும் அவஸ்தைபட்டனர்.
இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 4 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் தற்போது நிர்வாகத்திற்கு ரூ. 35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் முன்பதிவு செய்த பயணிகளின் கட்டணத்தை தற்போது திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி தற்போது ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் தாங்கள் எடுத்த டிக்கெட்டை அதிகாரிகளிடம் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here