பிரைம் வாலிபால் லீக் 2023: பெங்களூரில் இன்று முதல் தொடக்கம்!!

0
பிரைம் வாலிபால் லீக் 2023: பெங்களூரில் இன்று முதல் தொடக்கம்!!
பிரைம் வாலிபால் லீக் 2023: பெங்களூரில் இன்று முதல் தொடக்கம்!!

பிரைம் வாலிபால் லீக் தொடரின் 2வது சீசன் இன்று முதல் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது.

பிரைம் வாலிபால் லீக்:

இந்தியாவில், கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, கபடி உள்ளிட்ட குழு விளையாட்டுகளை போல வாலிபாலும் பிரபலமாகி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட்டுக்கு ஐபிஎல், கால்பந்துக்கு ஐஎஸ்எல் போன்று கடந்த ஆண்டு முதல் வாலிபாலுக்கு பிரைம் வாலிபால் லீக் (PVL) தொடர் நடத்தப்படுவதே ஆகும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த ஆண்டு 7 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணி முதல் பட்டத்தை தட்டி சென்றது. இந்த பிரைம் வாலிபால் லீக் தொடரின் 2வது சீசனானது இன்று முதல் தொடங்கி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், பெங்களூரு டார்பிடோஸ், காலிகட் ஹீரோக்கள், சென்னை பிளிட்ஸ் அட்டாக்கர்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அட்டாக்கர்ஸ், மும்பை விண்கற்கள் என 8 அணிகள் பங்கு பெற உள்ளன.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

இந்த தொடரின் முதல் போட்டியானது, டார்பிடோஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணி இன்று பெங்களூரில், மோத உள்ளது. இந்த லீக் தொடரை தமிழில் Sony Sports Ten 4 (தமிழ் & தெலுங்கு) யில் காணலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here