பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

இந்திய சினிமா துறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட ஏகப்பட்ட மொழிகளில் பின்னணி பாடகியாக தனி புகழோடு ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் பாடகி வாணி ஜெயராம். இவர் ”தீர்க்கசுமங்கலி” என்ற திரைப்படத்தில் உள்ள “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து நித்தம் நித்தம் நெல்லி, ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், இது போன்ற 10000 மேற்பட்ட சிறந்த பாடல்களை இந்திய சினிமாவிற்கு கொடுத்த இசைஞானி ஆக கருதப்படுகிறார். என்னதான் இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய நாட்டிலுள்ள 19 மொழிகளில் சினிமா பாடல்களை பாடி அசத்தியுள்ளார். மேலும் இவரின் சிறந்த பாடலுக்காக மூன்று தடவை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனுசனுக்கு இதெல்லாம் கண்டிப்பா இருக்கனும்.., சாய்பல்லவி உருக்கமான பதிவு!!

இவர் 78வது வயதை அடைந்த நிலையில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்போது நாலு சகாப்தங்களை தன் வாழ்நாளில் பார்த்த புகழுக்குரியவரான வாணி ஜெயராம் நெற்றியில் காயங்களுடன் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்ட இந்திய சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இவரது குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றன. மேலும் இவரின் மரணம் இந்திய திரை உலகிற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here