மார்ச் 22 யாரும் வெளியில் வர வேண்டாம் – மோடி அறிவித்த ‘ஜனதா கர்ப்பியூ’..!

0
Modi
Modi

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைச்சகம் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கொரோனா தொற்று..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மோடி அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியில் மோடி அறிவுரை..!

பிரதமர் கூறியதாவது, மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கவுண்ட் 206 – உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு..!

பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுபவர்களை தவிர யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் தங்களுக்குள்ளயே ஊரடங்கு உத்தரவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு மோடி இந்தியில் அறிவுரை தெரிவித்துள்ளார்.

‘ஜனதா கர்ப்பியூ’ என்றால் என்ன..?

இதையடுத்து, முடிந்தால் தயவுசெய்து ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 பேரை அழைத்து, ‘ஜனதா கர்ப்பியூ’ பற்றியும், தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சொல்லுங்கள் என நாட்டு மக்களுக்கு மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத பலர் பிரதமர் அறிவுறுத்தலை எப்படி புரிந்துகொள்வது என்று கூறுகின்றனர்.

பிரதமர் கூறிய ‘ஜனதா கர்ப்பியூ’ என்னவென்றால் ஊரடங்கு உத்தரவை போல மக்கள் தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் ‘மக்கள் ஊரடங்கு’ என்பதுதான்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here