குழந்தை பேறு வரம் தரும் கர்ப்பரட்சாம்பிகை – வரலாறு!!

0
karparatchambikai
karparatchambikai

தற்போது உள்ள தலைமுறையில் தலைதூக்கியுள்ள பெரிய பிரச்சனையே குழந்தையின்மை தான். முக்கியமாக ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கே பெரும்பாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் மடிக்கணினி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. குழந்தையின்மை பிரச்னையை நீக்க சில வழிபாடுகள் உள்ளன வாங்க பார்க்கலாம்.

கர்ப்பரட்சாம்பிகை

தஞ்சையில் உள்ள திருக்கருகாவூரில் தான் முல்லை வன நாதர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் வீற்றிருப்பவர் தான் கர்ப்பரட்சாம்பிகை. கர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் ஆகியவை நீங்கும் என நம்பப்படுகிறது. மக்கள் அனைவரும் அங்கு சென்று வழிபட்டதால் குழந்தைபாக்கியம் பெற்றதாக கூறுகின்றனர். குழந்தை பெற்றதும் துலாபாரம் , குழந்தையின் எடைக்கு எடை நாணயம் பழங்கள் போன்றவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர்.

karparatchambikai
karparatchambikai

பூர்த்துவப்பாதர் என்ற முனிவரின் கோபத்தால் கரு கலைந்த வேதிகை என்ற பெண் அம்பிகையை அழுது கதறி வழிபட்டுள்ளார். இதனால் மனமுறுகிய அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை வடிவில் அருள்புரிந்துள்ளார். கலைந்த கரு திருவாக உருப்பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. சிவன் கோவிலான இந்த தளம் கர்ப்பரட்சாம்பிகை பெயரிலேயே அழைக்கப்படுகிறது. கர்ப்பரட்சாம்பிகை சன்னிதியில் நெய்யால் மொழுகி கோலமிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Garbarakshambigai
Garbarakshambigai

மேலும் இதனால் கருவுற்ற பெண்கள் சுக பிரசவமாக அம்பாள் காலடியில் நெய் வைத்து வழிபட்டு 48 நாட்கள் அதனை சாப்பிட்டு வந்தால் சுக பிரசவம் நடக்கும். இப்பொழுது உள்ள கொரோனா காலகட்டத்தில் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம். கூகிளில் கர்ப்பரட்சாம்பிகை temple என தேடினால் அவர்களின் வலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here