சூப்பரான அசைவ ஸ்னாக்ஸ் ரெசிபி – டேஸ்டியான “இறால் வடை”!!

0

சிக்கன் மற்றும் மட்டனில் இல்லாத பல நன்மைகள் இறாலில் உள்ளது என்று தான் கூற வேண்டும். இறால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இன்று டேஸ்டியான “இறால் வடை” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • இறால் – 250 கிராம்
  • சின்ன வெங்காயம் – 5 முதல் 7
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • பூண்டு – 2
  • இஞ்சி – 3
  • மல்லித்தழை – தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 3
  • சீரக தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • ஏலக்காய் – 3
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பெரும்சீரகம் – 3 டீஸ்பூன்
  • கருவேப்பில்லை – தேவையான அளவு
  • சுண்டல் கடலை – 1/4 கப்
  • பட்டை – 2

செய்முறை

முதலில், இறாலை நன்றாக சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின், மிக்சியில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின், மீண்டும் மிக்சியில் சுண்டல் கடலை, பட்டை, சிறிதளவு சோம்பு ஆகியவற்றை போட்டு, கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

‘எதுவா இருந்தாலும் ‘வலிமை’ படத்துக்கு அப்பறம் தான்’ – அஜித்தே வெளியிட்ட செய்தி!!

பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்துள்ள வெங்காய கலவை சிறிதளவு சேர்த்து அதில் இறாலை போட்டு வதக்க வேண்டும். பின், அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிண்டி கொள்ளவும். பின், அதனையும் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின், எடுத்து வைத்துள்ள அனைத்து கலவையையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை வடை போல தட்டி அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். மிதமான சூட்டில் வைத்து தான் வடையை சுட வேண்டும். இதனை சூடாக அப்படியே பரிமாறலாம். அவ்ளோ தான்!!

டேஸ்டியான “இறால் வடை” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here