ஊரே மண மணக்கும் “இறால் குழம்பு”.,,,இன்னைக்கு ஒரு புடி தான்!!

0
ஊரே மண மணக்கும்
ஊரே மண மணக்கும் "இறால் குழம்பு".,,,இன்னைக்கு ஒரு புடி தான்!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ‘சுவையான இறால் குழம்பு” செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
 • சுத்தம் செய்த இறால் – 1/2 கிலோ
 • சின்ன வெங்காயம் – 100 கிராம்
 • தக்காளி- 2
 • பச்சை மிளகாய் – 2
 • எண்ணெய் – தேவையான அளவு
 • தண்ணீர் – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு
 • சோம்பு, சீரகம், மிளகு – 1 டீஸ்பூன்
 • பட்டை – 2 துண்டு
 • ஏலக்காய், கிராம்பு – 4
 • கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
 • மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
 • வரமிளகாய் – 3
 • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
 • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – தேவையான அளவு
 • கொத்தமல்லி – சிறிது
 • தேங்காய் பால் – சின்ன கப்

செய்முறை:

சுவையான இறால் குழம்பு செய்வதற்கு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு வாணலியில் சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கசகசா, மல்லி , வரமிளகாய் ஆகியவற்றை நன்றாக வறுத்து சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். இதையடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்த பின், தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடவும். மேலும் இப்போது எண்ணெய் பிரிந்து வரும். இந்த சமயத்தில் அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய் தூள்,மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து மசாலாவில் பச்சை வாசனை போன பின் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து கிளறி விட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். இப்போது 5 நிமிடம் கழித்து முடியை திறந்து, தேங்காய் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும், பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கினால் “சூப்பரான இறால் குழம்பு” ரெடி. இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க, அதோட டேஸ்ட் புடிச்சு அடிக்கடி செய்வீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here