TET தேர்வில் நடந்த குளறுபடி – அட்மிட் கார்டில் அதிர்ச்சி புகைப்படம்! தேர்வுத்துறை புதிய விளக்கம்!!

0
TET தேர்வில் நடந்த குளறுபடி - அட்மிட் கார்டில் அதிர்ச்சி புகைப்படம்! தேர்வுத்துறை புதிய விளக்கம்!!
TET தேர்வில் நடந்த குளறுபடி - அட்மிட் கார்டில் அதிர்ச்சி புகைப்படம்! தேர்வுத்துறை புதிய விளக்கம்!!

ஆசிரியர் பணியிடங்களுக்காக நடந்த டெட் தேர்வில், தேர்வர் ஒருவரின் நுழைவுச்சீட்டில் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் இருந்தது, கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நுழைவுச்சீட்டில் குளறுபடி :

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்த தேர்வுக்கான முதல் தாள் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த டிசம்பர் மாதம் 2ம் தாள் நடக்கும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு (TET ) நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த பெண் தேவர் ஒருவர், கடந்த நவம்பர் 2-ம் தேதி இந்த தேர்வுக்கான அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்தார். அப்போது, அந்த பெண்ணின் புகைப்படத்துக்கான பகுதியில் அவரின் புகைப்படம் இல்லாமல், வேறு ஒருவரின் மார்ஃபிங் செய்யப்பட்ட, அரை நிர்வாண புகைப்படம் இடம் பெற்று இருந்தது.

தலைமுடி உதிவால் அவமானத்திற்கு ஆளான இளைஞர்.., தற்கொலை செய்துகொண்ட அவலம்.., டாக்டரை வளைத்த போலீசார்!

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட தேர்வாணையத்திற்கு புகார் மனுவை அனுப்பினார். இது குறித்து விளக்கம் அளித்த ஆணையம், எடிட் ஆப்ஷனை பயன்படுத்தி இந்த குளறுபடி நடந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here