பவர் ஸ்டார் உடன் உல்லாசமாக பைக் ரைடு போகும் வனிதா… இணையத்தில் டிரெண்டாகும் கப்பிள்ஸ் புகைப்படம்!!!

0

பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் இருப்பவர் நடிகை வனிதா. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பவர் ஸ்டார் உடன் பைக்கில் ரைடு செல்வது போல உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக தன்னை முன்னிலை படுத்தியவர் நடிகை வனிதா அவர்கள். அவர் சொல்லிக் கொள்ளும் வகையில் படங்கள் எதுவும் நடக்கவில்லை என்றாலும், கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைகள் மூலம் படு பேமஸ் ஆனவர். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு கூடுதல் பலமாக அமைந்தது. அதாவது, சக போட்டியாளர்கள் உடன் சண்டை போடுவது, அவர்களிடையே வத்தி வைப்பது போன்ற பல செயல்களை செய்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டார் மற்றும் வனிதாவும் திருமணம் கொண்டது போன்றதொரு புகைப்படம் இணையத்தில் வெளியானது. பிறகு அது ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியான புகைப்படம் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் வனிதா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவரும் பவர் ஸ்டாரும் இணைந்து பைக்கில் செல்வது போல உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here