அய்யோ.. பாவம்.. பவர் ஸ்டாருக்கு இந்த நிலைமையா? – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

தமிழ் சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவர் ஸ்டார் சீனிவாசன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பாவம் பவர் ஸ்டார்:

தமிழ் சினிமாவில் செல்லமாக  பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் மிக பெரிய மைல் கல்லை அடைந்தார்.  இதில், தற்போது இவர் சர்ச்சை நாயகி என்று அழைக்கப்படும் வனிதா விஜயகுமாருடன் பிக்கப் டிராப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இந்த படப்பிடிப்பு தளத்தில், தனக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரின் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here