மக்களே.., இப்பயே சார்ஜ் போட்டு வச்சுகோங்க.., நாளை இந்த மாவட்ட பகுதிகளில் மின்தடை!!

0
மக்களே.., இப்பயே சார்ஜ் போட்டு வச்சுகோங்க.., நாளை இந்த மாவட்ட பகுதிகளில் மின்தடை!!
மக்களே.., இப்பயே சார்ஜ் போட்டு வச்சுகோங்க.., நாளை இந்த மாவட்ட பகுதிகளில் மின்தடை!!

தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் விளங்கி வருகிறது. ஆனால் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு மாதம் ஒரு முறை மின் வழித்தடங்களில் மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கே.வி.ரெங்கநாதபுரம் துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மின் நிலையத்திற்கு உட்பட்ட சரளபட்டி, கல்லுப்பட்டி, தேவிநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் இந்த 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…, இந்திய வானிலை மையம் தகவல்!!

இதுபோக தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். எனவே காலை 10 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஊத்துப்பட்டி, இந்திரா காலனி, கன்னி சேர்வை பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here