தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை., நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

0
தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை., நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் வழங்கும் உத்தரவுகளை, ஒரு சில அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள பூம்புகார் கப்பல் கழகம், ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அதில் நிலுவைப் பாக்கியை உரிய வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறநிலைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை வாடகை பாக்கி வராததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று (பிப்.30 விசாரித்த நீதிபதிகள், “அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோவில் சொத்துக்களின் வருமானங்களை வசூல் செய்வது கூட கஷ்டமாக உள்ளது. நல்ல ஊதியம் வழங்கப்பட்டாலும், பணியாற்றுவதில் மெத்தனமாக செயல்படுகின்றனர்.” என சரமாரியாக கடிந்து இருந்தார். மேலும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here