மார்ச் 29 இல் ‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழா…., அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..,

0
மார்ச் 29 இல் 'பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீட்டு விழா...., அதிகாரப்பூர்வ அறிவிப்பு.....,
மார்ச் 29 இல் 'பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீட்டு விழா...., அதிகாரப்பூர்வ அறிவிப்பு.....,

‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இசை வெளியீட்டு விழா

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. பலரது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ முதலாம் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதே போல உலகளவில் எக்கச்சக்கமான வசூலையும் குவித்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியன்று ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

CSK ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்….,மார்ச் 27 முதல் டிக்கெட் விற்பனை….,

அதன்படி, மார்ச் 29 ஆம் தேதியன்று ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான இசை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இத்திரைப்படத்திற்கான டிரைலரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘அக நக’ பாடல் கடந்த 20 ஆம் தேதியன்று வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here