CSK ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்….,மார்ச் 27 முதல் டிக்கெட் விற்பனை….,

0
CSK ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்....,மார்ச் 27 முதல் டிக்கெட் விற்பனை....,
CSK ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்....,மார்ச் 27 முதல் டிக்கெட் விற்பனை....,

வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27 ஆம் தேதியன்று துவங்க இருக்கிறது.

டிக்கெட் விற்பனை

நடப்பு ஆண்டுக்கான IPL போட்டிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாக அதற்கான டிக்கெட்டுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டி ஏப்ரல் 3 ஆம் தேதியன்று சென்னை அணியின் ஹோம் இடமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போது, சென்னை அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27 ஆம் தேதியன்று துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, CSK ரசிகர்கள் வரும் மார்ச் 27 ஆம் தேதியன்று MA சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு நேரடியாக சென்று டிக்கெட்டுகளை பெறலாம்.

பாக்குறவங்க கண்ணு கூசிப்போர அளவுக்கு படு கச்சிதமா கிளாமர் வலை வீசும் தர்ஷா.., அந்த கவர்ச்சி வலையில் சிக்கி கொண்ட ரசிகர்கள்!!

மேலும், www.insider.in இணையதளம் மூலமும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, சி/டி/இ லோயர் இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.1,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல D/E அப்பர் இருக்கைகளுக்கான டிக்கெட் விலை ரூ.3,000, I/J/K லோயர் இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.2,500, I/J/K அப்பர் இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.2,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here