‘பத்து தல’ படத்தின் ‘ராவடி’ பாடல் வெளியீடு…..,உற்சாகத்தில் ரசிகர்கள்….

0
'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வெளியீடு.....,உற்சாகத்தில் ரசிகர்கள்....
'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வெளியீடு.....,உற்சாகத்தில் ரசிகர்கள்....

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் ராவடி பாடல் இன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

பாடல் வெளியீடு

இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை ப்ரியா பவானி சங்கர், தான்யா, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஆக்ஷன் த்ரில்லர் வகையை சார்ந்த இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அந்த வகையில், இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 18 ஆம் தேதியன்று நடைபெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மார்ச் 29 இல் ‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழா…., அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..,

இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மகன் ஏ.ஆர்.அமீன், சக்திஸ்ரீ கோபாலன் என பலர் பாடியுள்ளனர். இந்த நிலையில், பாடகர் நிவாஸ் குரலில் உருவாகியுள்ள ‘ராவடி’ என்ற பாடல் வீடியோ இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், நடிகை சாயிஷா மற்றும் நடிகர் கவுதம் கார்த்திக் ஆகியோரின் கிளாமர் நடனத்துடன் வெளியாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here