பப்ஜி விளையாட்டால் நேர்ந்த சோகம் – மேலும் இரண்டு வழக்குகள்

0

பப்ஜி விளையாட்டு பிரியர்களுக்கு பிடித்தமான மதன் பப்ஜி யூடியூபர் மீது பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு புகார்கள் எழுந்துள்ளன. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பப்ஜி:

இந்தியாவில் அதிக அளவில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவராலும் விளையாடப்பட்ட கேம் தான் PUBG. உலகையே மறந்து இந்த விளையாட்டை விளையாடுபவர்களும் உள்ளனர். சீன செயலிகளை தடை செய்யும்போது இந்த விளையாட்டையும் தடை செய்தனர். இருந்தாலும் விபிஎன் முறையில் சட்டவிரோதமாக அந்தவிளையாட்டை சிலர் விளையாடி வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டில் முழ்கிக்கிடக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டின் ட்ரிக்சை முகத்தை காட்டாமல் ஆன்லைனில் விளையாடிக்கொண்டே விளக்குவது தான் மதன் யூடியூப் சேனல்.

இதனால் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைக்கும் மதன், உடனே அவர்களை இன்ஸ்டா பக்கத்திற்கு தவறாக பேசுவது வீடியோ கள்ளச்செய்ய அழைப்பது என அவர் மீது புகார்கள் எழுந்துள்ளது.இந்நிலையில் மதன் யூடியூப் சேனல் மீது காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநில குழந்தைகள் உரிமைகள் ஆனையமும் புகாரை ஏற்று விசாரணையை தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here