நான் அடிச்ச மணி … கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ …. அரசாங்கத்துக்கு கேட்டருச்சி… : தங்கம் விலை இன்று 240 ரூபாய் சரிவு!!!

0

சமீப காலமாக தங்கம் விலை திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று 240 ரூபாய் சரிவு:

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை. எனினும், தொழில்துறை தேக்கம் குறித்த அச்சத்தால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து ரூ.4,605 ஆக விற்பனை செய்யப்படுகிறது, அதன் படி 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதனை தொடர்ந்து தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 4,964 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 39,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 240 ரூபாய் குறைந்து 39,712 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிலோ வெள்ளி 77,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவை தவிர பிற மாநிலங்களில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,777 என்றும், பெங்களூருவில் ரூ.4,611 என்றும், ஹைதராபாத்தில் ரூ.4,611 என்றும், கேரளாவில் ரூ.4,615 என்றும், டெல்லியில் ரூ.4,826 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,857 ஆகவும், ஒசூரில் ரூ.4,616 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,612 என்றும் விற்பனை செய்யப்டுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here