3 வயது சிறுவனுக்கு செலுத்தப்பட்ட உலகின் மிக உயரிய மருந்து… விலை 16 கோடியாம்!!!

0

ஹைதராபாத்தில் உள்ள மூன்று வயது அயன்ஷ் முதுகெலும்பு தசைநார் பாதிப்பு எஸ்.எம்.ஏ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு உலகின் மிக விலை உயர்ந்த மருந்தான ஜோல்கென்ஸ்மா தேவைப்பட்டது. இதன் விலை 16 கோடியாகும். இந்த தொகையை  அவனின் பெற்றோர் நன்கொடை மூலம் திரட்டி உள்ளனர்.

யோகேஷ் குப்தா மற்றும் ரூபால் குப்தா ஆகியோர் மகனான 3 வயதே ஆன அயன்ஷ் என்பவர் முதுகெலும்பு தசைநார் பாதிப்பு எஸ்.எம்.ஏ எனப்படும் ஒரு வகை அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  அந்த சிறுவன். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஏற்பட்ட நோய் பற்றியும் அதற்கான மருந்தான ஜோல்கென்ஸ்மா பற்றியும் கூறினார். இந்நிலையில் அந்த மருந்தின் விலை 16 கோடி என்பதை அறிந்த அந்த பெற்றோர் கையில் அவ்ளோ தொகை இல்லாததால் நன்கொடையாக வசூலிக்க முடிவு செய்தனர்.

 

மேலும், இதனை மூன்றரை மாத காலப்பகுதியில் கூட்ட நிதியுதவி மூலம் 16 கோடியை திரட்ட வேண்டியிருந்தது. இந்த நிதியை திரட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அந்த பெற்றோர்கள். அதன் விளைவாக,விராட் கோலி, அனுஷ்கா சர்மா, எம்ரான் ஹாஷ்மி, தியா மிசா, ஜாவீத் ஜாஃப்ரி, ராஜ்குமார் ராவ், அர்ஜுன் கபூர் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட  65,000 நன்கொடையாளர்கள் இடமிருந்து ரூ.16 கோடியை அவர்கள் நன்கொடையாக  திரட்டினர். இந்த நிதி மூலம் அவர்கள் அந்த மருந்தினை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தனர். மேலும் அரசு இதன் இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்பட்டதோடு , சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும்  ஜிஎஸ்டி இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

செகந்திராபாத்தில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் அயன்ஷுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு மாலை வரை அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த சிறுவனின் தந்தை கூறுகையில் காய்ச்சலை தவிர,ஓரிரு நாட்களில் அவர் நார்மல் ஆகிவிடுவார் என்று கூறியுள்ளார். முதுகெலும்பு தசை குறைபாடு என்பது ஒரு மரபணு கோளாறு ஆகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here