டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓகளை ஓவர்டேக் செய்த விப்ரோ சிஇஓ…! பிரமிக்க வைக்கும் சம்பளம்!!!

0

சமீபத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது காலாண்டு மற்றும் நிதிநிலை அறிக்கையையும் வெளியிட்டது. அதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது டாப் ஐடி நிறுவனங்களின் சிஇஓ-களின் சம்பளம் தான். ஏற்கனவே டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களின் சிஇஓகளின் சம்பளம் அறிவிக்கப்பட்டு அதிர்ச்சியை தந்த  நிலையில் தற்போது விப்ரோ சிஇஓ-வின் சம்பளம் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் தொழில் துறைகள் அனைத்தும் முடங்கி உள்ளது. இதனால் வர்த்தகத்தில்  பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இந்திய ஐடி நிறுவனங்கள் பல ஆட்டோமேஷன், கிளவுட் திட்டங்களை போன்றவற்றை  உலகம் முழுவதிலுமிருந்து பெற்றது. இதனால் ஐடி நிறுவனங்கள் வர்த்தகம் எண்ணாத  வகையில் அதிகரித்தது. இதையடுத்து அந்த நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் 20.4 கோடி ரூபாய் சம்பளமும்  , இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 49.8 கோடி ரூபாய் சம்பளமும்  பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்களுக்கு  விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வான தியரி டெலாபோர்டே-வின் சம்பள விவரங்கள் பெரும் மலைப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, 2020-21 நிதியாண்டுக்கான தியரி டெலாபோர்டே சுமார் 8.8 மில்லியன் டாலர் இந்திய மதிப்பின் படி 64 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இதனால் இந்திய ஐடி துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் தியரி டெலாபோர்டே.

தியரி டெலாபோர்டே நிறுவனத்தின் சிஇஓ-வாக ஜூலை 2020 ல் பதவியேற்றார். கடந்த ஆண்டில்  ரூ 9.6 கோடியை  அடிப்படை சம்பளம் ஆகவும், ரூ 11.2 கோடியை  கமிஷன் தொகையாகவும், 5.5 கோடி ரூபாய் நீண்ட கால ஊதியமாகவும், ரூ.37.81 கோடியை இதர வருமானம் ஆக மொத்தம்  ரூ.64 கோடி  அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இந்தச் சம்பளமானது  ஜூலை 6 2020 முதல் மார்ச் 31, 2020 வரையிலான சம்பளம் மட்டுமே. அவர் பதவி ஏற்கும் பொது 37.9 கோடி சம்பளத்திற்குதான் நியமிக்கப்பட்டார்.

ஆனால் அவரது சீரிய முயற்சிகள், சிந்தனைகள் அந்த நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்கவே அவரது சம்பளமும் இரட்டிப்பாக்கியது. 2021 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி மற்றும்  தலைமை நிதியியல் அதிகாரியான ஜத்தின் தலால் அவரை விட குறைவான சம்பளமே பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here