பி.எம். கிசான் திட்ட விவசாயிகளுக்கு ஷாக்., உதவித்தொகை இவ்வளவு தான்? மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

0
பி.எம். கிசான் திட்ட விவசாயிகளுக்கு ஷாக்., உதவித்தொகை இவ்வளவு தான்? மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் நிலம் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை, கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 என ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 15 தவணைகளில் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, ரூ.2.81 லட்சம் கோடி வழங்கி உள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.8,000 அல்லது ரூ.12,000 என உயர்த்த, அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்த நிலையில், “அப்படியொரு எந்த திட்டமும் பரிசீலனையில் கூட இல்லை.” என அமைச்சர் தெளிவாக விளக்கமளித்துள்ளார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த விவசாயிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொது சிவில் சட்டம்: “லிவிங் டு கெதர்” உறவுமுறையை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்., வெளியான தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here