பொது சிவில் சட்டம்: “லிவிங் டு கெதர்” உறவுமுறையை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்., வெளியான தகவல்!!!

0
பொது சிவில் சட்டம்:

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக-வை சேர்ந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தேர்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என குறிப்பிட்டு இருந்தார். அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சட்ட வரைவு தயாரிக்கப்பட்ட நிலையில், இன்று (பிப்.6) உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதாவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் (Live-in Relationship), அந்த உறவு தொடங்கிய ஒரு மாதத்திற்குள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 26,146 பணியிடங்கள்…, இந்த பயிற்சி பெற்றால் பணியை எளிதாக வாங்கலாம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here