பிக் பாஸ்க்கு பின் பிரதீப்புக்கு கிடைத்த கௌரவம்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

0
பிக் பாஸ்க்கு பின் பிரதீப்புக்கு கிடைத்த கௌரவம்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் இந்த சீசன் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், இறுதியில் அர்ச்சனா கோப்பையை தட்டி சென்றார். இது புறம் இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் ஆண்டனியால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறப்பட்டது. இதனால்  அவருக்கு கமல் ரெட் கார்டு கொடுத்திருந்தார். ஆனால் பலரும் பிரதீபுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்

அதிலிருந்து எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாத இவர் தற்போது முதல்முறையாக பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அதில் அவருக்கு பொன்னாடை  அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அங்கு வந்த மக்களும் அவருக்கு கைதட்டி உற்சாகப்படுத்தினர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இதைப் பார்த்து நெட்டிசன்கள் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற கருத்துக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பி.எம். கிசான் திட்ட விவசாயிகளுக்கு ஷாக்., உதவித்தொகை இவ்வளவு தான்? மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here