விவசாயிகளுக்கான PM கிசான் 14 வது தவணை எப்போது?? வெளியான தேதி அறிவிப்பு!!

0
விவசாயிகளுக்கான PM கிசான் 14 வது தவணை எப்போது?? வெளியான தேதி அறிவிப்பு!!
விவசாயிகளுக்கான PM கிசான் 14 வது தவணை எப்போது?? வெளியான தேதி அறிவிப்பு!!

இந்தியாவில் வறுமையில் வாடும் விவசாயிகளுக்காகவே, ஆண்டுக்கு 6000 ரூபாய் என மூன்று தவணையாக 2000 ரூபாயை பிரதம மந்திரி(PM) கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது. மாநிலங்களில் உள்ள தகுதியுடைய விவசாயிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செய்யப்பட்டு வருகிறது. இதனை யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்த, மக்களவை உறுப்பினரான நரேந்திர சிங் தோமர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, யூனியன் பிரதேசங்களில் உள்ள தகுதியுடைய விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் PM கிசான் திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பில் சலுகை…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

மாநிலங்களில் இந்த PM கிசான் திட்டத்தின் படி, 13 தவணைகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 2000 அவர்களது வங்கி கணக்கிற்கு வெற்றிகரமாக சென்றுள்ளது. இதையடுத்து, 14 வது தவணை வரும் மே 26ம் தேதி முதல் மே 31ம் தேதிக்குள் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபுரவமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பத்தில் உள்ள விவசாயிகள், PM Kisan Yojana என அதிகாரப்பூர்வ இணையத்தில் pmkisan.gov.in கிளிக் செய்து தங்களது பெயர் உள்ளதா என பார்த்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here