விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., PM கிஷான் 16 வது தவணை இந்த தேதியில் வரவு வைக்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

0
விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., PM கிஷான் 16 வது தவணை இந்த தேதியில் வரவு வைக்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!
நாடு முழுவதும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு PM கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6000 வீதம் மூன்று தவணையாக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றனர். தற்போது வரை விவசாயிகளுக்கு 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது தவணை இன்னும் சில வாரங்களில் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மார்ச் மாதம் விவசாயிகளுக்கு 16 வது தவணை வங்கிகளில் செலுத்தலாம் என தகவல்கள் வெளியானது.
ஆனால் இப்போது அதற்கு மாறாக மற்றொரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது விவசாயிகளின் நலன் கருதி பிப்ரவரி மாதத்திலேயே 16வது தவணையை விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இன்னொரு பக்கம் PM கிசான் விவசாயிகள் KYC க்கான பணிகளை முடித்தால் மட்டுமே 16வது தொகையை பெற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here