குப்பைகளுக்கு பதிலாக தங்கம்…,இந்த டீலிங் நல்லா இருக்கே…,

0
குப்பைகளுக்கு பதிலாக தங்கம்...,இந்த டீலிங் நல்லா இருக்கே...,
குப்பைகளுக்கு பதிலாக தங்கம்...,இந்த டீலிங் நல்லா இருக்கே...,

பொது இடங்களில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கும் நபர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகத் தலைவர் அறிவித்துள்ளார்.

பரிசு அறிவிப்பு

இன்றைய தினத்தில் தங்கம் விற்கும் விலையில் அதனை வாங்குவதற்கு பலரும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. இந்த சூழலில், குப்பைகளை கொடுத்தால் தங்க நாணயம் கிடைக்கிறது என்று சொன்னால் அது யாருக்கு தான் கசப்பாக இருக்கும். அதாவது, பிளாஸ்டிக் குப்பைகளை அளிப்பவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்குவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பொறுமையா போகலாம்…., பெங்களூரூவிற்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா?..,

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், 2000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கும் நபர்களுக்கு தங்க நாணயத்தை வழங்கி வருகிறது ஒரு கிராம நிர்வாகம். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஏற்றபடி வெள்ளிக்காசுகளும் அளிக்கப்படுவதாக கிராமத் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here