தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..!

0

தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை ராஜூவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..!

இது குறித்து விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதாகவும் சென்னையில் ரூ.2.34 கோடி மதிப்பில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 7 இடங்களில் பிளாஸ்மா வங்கி திறக்கப்படும் என்றார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, திருச்சி, நெல்லை, மதுரையிலும் பிளாஸ்மா வங்கி தொடங்கப்படவுள்ளது.

plasma therapy treatment
plasma therapy treatment

பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஏராளமானோர் குணமடைந்துள்ளனர் ஆதலால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வர வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு தானம் அளிக்கலாம் எனவும் தானம் பெறும் பிளாஸ்மாவை ஓராண்டு வரை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். மேலும் கொரோனா உயிரிழப்புகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற காரணங்களால் இறந்தவர்களையும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களாக கருதுமாறு ICMR தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே உயிரிழப்புகள் குறித்த விவரம் வெளியிடப்படுகிறது.

அமெரிக்காவில் நிலை மோசமாகிவிடும் – டிரம்ப் அதிர்ச்சித் தகவல்!!

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 20,35,645 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here