தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து – முதல்வர் அறிவிப்பு!!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

செமஸ்டர் தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளித் தேர்வுகளைப் போல கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

  • தமிழகத்தில் இந்த பருவத்திற்கான அனைத்து செமஸ்டர் தேர்வுகளில் இருந்தும் மாணவர்களுக்கு விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டிற்குச் செல்ல அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
  • முதல் மற்றும் 2ம் ஆண்டு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.  இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை.
  • முதல், 2ம் ஆண்டு, பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது.
  • முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதல், 2ஆம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.  இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை.
  • முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு யுஜிசி, AICTE பரிந்துரைகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here