பிரதோஷத்தில் சிவனை வழிபடும் முறைகள் – ஆன்மீக விளக்கம்!!

0

நமது மூத்த கடவுளான சிவனை வழிபடுவதற்கே அவன் அருள் வேண்டும். பெரும்பாலான இளைஞர்களுக்கு சிவன் என்றாலே மிகவும் பிடிக்கும். சிவன் உருவத்தை பச்சை குத்துவது, கீ செயின் போன்றவற்றிலும் வைத்துக்கொள்கிறார்கள். “ஓம் நாம சிவாயா” என்ற மந்திரத்தை சொன்னாலே போதும் நமக்கு ஒரு புதுவித சக்தி உருவாகும். பிரதோஷம் என்றால் என்ன?? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

பிரதோஷ வழிபாடு

பிரதோஷம் என்பது மாதம் இரண்டு முறை வருகிறது. அமாவாசை நாளில் இருந்து பதிமூன்றாவது நாளும், பௌர்ணமி நாளில் இருந்து பதிமூன்றாவது நாளும் பிரதோஷம் என்று கருதப்படுகிறது.

பிரதோஷ நாளில் எப்பொழுது வழிபட வேண்டும்?? என்றால் மாலை 4.30 முதல் 6 மணி வரை வழிபாட்டு நேரமாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சிவன் மற்றும் நந்திவர்மனுக்கு அபிஷேகம், பூஜை போன்றவை நடைபெறும். அபிஷேகம் செய்ய நம்மால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுத்தால் அதற்கான பலன் கிடைக்கும்.

அபிஷேகம் செய்ய உகந்த பொருட்கள்:

சுத்தமாக கறந்த பசும் பால், சந்தனம், இளநீர், தயிர், மோர், அரிசி மாவு, வெல்லம், மலர்கள், மரிக்கொழுந்து, பசுநெய். பிரதோஷம் அன்று விரதம் இருந்து மாலை நேரத்தில் பூஜை முடித்துவிட்டு விரதம் விட்டால் முழு பலன் கிடைக்கும். விரதத்திற்காக சமைக்கும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்க கூடாது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

sivan

இந்த நேரத்தில் பூஜையில் கலந்து கொண்டால் நாம் செய்த தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. தோஷங்கள் நீங்குவதால் பிரதோஷம் என்று கூறப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு அவல், வெல்லம் மற்றும் பழங்கள் கலந்த உணவை பிரசாதமாக குடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here