கொரோனாவை தடுக்க மாஸ்குகளை பெட்ரோல் விட்டு கழுவுங்கள் – பிலிபைன்ஸ் ஜனாதிபதி!!

0

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் பயன்படுத்தி வரும் மாஸ்குகளை பெட்ரோல் விட்டு சுத்தப்படுத்தலாம் என பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ ட்யுடேர்ட் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் பயன்படுத்தி மாஸ்குகளை கழுவுங்கள்..!

ரோட்ரிகோ ட்யுடேர்ட் கடந்த வாரமும் இதே கருத்தை முன் வைத்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பு உடனடியாக அவரை திருத்தியதால் இது கேலிக்கையான பேச்சு என்றார். துணியாலான மாஸ்குகளை சாதாரணமாக கழுவ வேண்டும் எனவும் அறுவை சிகிச்சை செய்த மாஸ்குகளை மாற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் வெள்ளிக்கிழமை தாம் ஏற்கனவே கூறிய கருத்தான விளையாட்டல்ல என் கூறி ஜனாதிபதி ட்யுடேர்ட் பெட்ரோல் நிலையம் செல்லுங்கள் என்றார். இதனிடையே பெட்ரோலை வைத்து மாஸ்குகளை கழுவினால் கிருமி நீக்கம் செய்ய முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனுடன் நீண்டகால தொடர்பு வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்தனர்.

அமெரிக்காவில் முதல் முறையாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாய் உயிரிழப்பு!!

நான் கூறியதில் எந்த தவறும் இல்ல கிருமி நீக்கம் செய்ய ஆல்கஹால் கிடைக்கவில்லை என்றால் குறிப்பாக ஏழைகளுக்கு பெட்ரோல் நிலையம் சென்று கிருமி நீக்கம் செய்ய பெட்ரோலை பயன்படுத்துங்கள் என்று ஜனாதிபதி ரோட்ரிகோ ட்யுடேர்ட் என்றார். இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here