சட்டமன்ற தேர்தல் எதிரொலி – பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!!

0

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் கூடிய விரைவில் நடைபெற இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

இந்தியாவில் சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விலை மற்றும் வரி உயர்த்தப்பட்டதால் மக்கள் ஆளும் கட்சியான பாஜக மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இந்த சமயத்தில் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பாஜக மிகுந்த குழப்பத்தில் உள்ளது.

மீண்டும் லாக்டவுனுக்கு வாய்ப்பா??இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை காரணம் காட்டி அனைத்து கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்து வருவது மேலும் அந்த கட்சிக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியினை குறைக்கலாமா என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நமது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு என்று விதிக்கப்படும் வரிகளின் மூலமாக அரசிற்கு ஒரு ஆண்டிற்கு 5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கின்றது. அதிகபட்சமாக 28 சதவீதமாக ஜிஎஸ்டி வரியினை குறைத்தாலும் அரசிற்கு 2.5 லட்சம் கோடி இழப்பு நேரிடும். இது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here