2036 வரை நிரந்தர அதிபர் புதின் – சட்ட திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு!!

0
புற்றுநோயால் பார்வையை இழந்த ரஷ்ய அதிபர் புதின் - 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்!!
புற்றுநோயால் பார்வையை இழந்த ரஷ்ய அதிபர் புதின் - 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்!!

ரஷ்ய நாட்டின் அதிபராக தற்போது இருக்கும் விளாமிடிர் புதின், அதே பதவியில் 2036ம் ஆண்டு வரை நீடிப்பதற்கு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

நிரந்தர அதிபர்:

ரஷ்யாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும், தற்போது வீரியம் அதிகரித்து பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவில் மிக தீவிரமாக பரவ இருந்த கொரோனாவை அதிபர் புதின் சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளார். ரஷ்யாவில் ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க இயலாது. மேலும் 6 ஆண்டுகள் தான் பதவிக்காலம். ஏற்கனவே 2008 முதல் 2012 ஆண்டு வரை ரஷ்யாவின் பிரதமராக இருந்த புதின், அதன் பின்னர் 2012ம் ஆண்டில் இருந்து அதிபராக பதவி வகித்து வருகிறார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Vilamidir Puthin
Vlamidir Putin

இவரது பதவிக்காலம் 2024ம் ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 2 முறை அதாவது 2036 வரை நீட்டிக்க, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இருப்பினும் மக்களிடம் இது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. 7 நாட்கள் நடைபெற்ற வாக்களிப்பில் புதினும் வாக்களித்தார். தற்போது அதன் எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெடுஞ்சாலைத்துறை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!

தற்போது வரை 60% வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன. இதில் புதினுக்கு ஆதரவாக 76% க்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து உள்ளனர். இதனால் 2036 வரை புதின் ரஷ்ய அதிபராக நீடிக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இருப்பினும் வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here