‘ஜெகமே தந்திரம்’ படத்தின் முதல் பாடல் தனுஷின் பிறந்தநாள் அன்று ரிலீஸ்..!

0

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெகமே தந்திரம் படத்தின் முதல் பாடல் தனுஷின் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தனுஷின் ஜெகமே தந்திரம்..!

தமிழில் ரொம்ப பிஸியான நடிகரான தனுஷ் அவர் கையில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் ஜெகமே தந்திரம். இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம். மே 1 அன்று ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படம் முடங்கியுள்ளது. லண்டனில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28 அன்று படத்தின் முதல் பாடலான ‘ரகிட ரகிட’ பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here