வெள்ள நிவாரணம் எதிரொலி… ரேஷன் கடையில் வாக்குவாதம் செய்த மக்கள்.. பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்!!

0

மிக் ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அரசு பல நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை 6000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய வெள்ள நிவாரணத்திற்கான டோக்கனை வழங்க கோரி சென்னை  நுங்கம்பாக்கம் அருகே இருக்கும் ராமா தெருவில் உள்ள ரேஷன் கடை முன்பு மக்கள் அலை மோதினர். எங்களுக்கு டோக்கன் வரவில்லை என்று ரேஷன் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊழியர்கள் டோக்கன்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறிய போதும், அதை கேட்காமல் மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து காவலர்கள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here