என்ன மனுஷன் யா..உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!!

0
என்ன மனுஷன் யா..உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!!
என்ன மனுஷன் யா..உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!!

தமிழ் இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா நேற்று முன்தினம் காலமானார். இவரின் இறுதிச் சடங்கில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்களை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த இணைய வாசிகளோ, தங்களை தவறாக நினைத்து கலாய்த்து விட்டோம் என்றும் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர்.

கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – தமிழக அரசு அதிரடி!!!

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனராக உள்ளவர் அருண்ராஜா காமராஜ். நடிப்பு தவிர்த்து தெறி, காக்கிசட்டை, காலா உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில் இவரின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அருண்ராஜா காமராஜிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இவர் பிபிஇ சூட் அணிந்து தனது மனைவிக்கு இறுதி சடங்குகளை செய்தார்.சிந்துஜாவுக்கு அஞ்சலி செலுத்த எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினும் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனும், மின்மயானத்திற்கு வந்திருந்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

என்ன மனுஷன் யா..உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!!
என்ன மனுஷன் யா..உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது சம்மந்தமான புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு, “நேர்த்தியான இயக்குனர் – நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியிருந்தார்.இதை பார்த்த நெட்டிசன்கள் உங்களை தவறாக நினைத்து கலாய்த்து விட்டோம். நீங்கள் அருண்ராஜா காமராஜிற்கு சரியான நேரத்தில் பக்கபலமாக இருந்துள்ளிர்கள் என பாராட்டி வருகின்றனர். மேலும் இறுதிச் சடங்கிற்கு செல்லும் போது கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் அன்புடன் அறிவுரை கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here