pcod பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் தவிச்சுகிட்டு இருக்கீங்களா?? உங்களுக்காக தான் இந்த பதிவு!

0
pcod பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் தவிச்சுகிட்டு இருக்கீங்களா?? உங்களுக்காக தான் இந்த பதிவு!
pcod பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் தவிச்சுகிட்டு இருக்கீங்களா?? உங்களுக்காக தான் இந்த பதிவு!

இன்றைய காலகட்டத்தில் pcod பிரச்சனையால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு உரிய சிகிச்சை எடுத்தால் இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் மீண்டு வரலாம். அதாவது சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளை தான் pcod என்று சொல்கிறோம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த குறைபாடு பெண்களுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக உணவு முறை, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, மரபணு பிரச்சனை உள்ளிட்டவைகள் தான் சொல்லப்படுகிறது. இது குறைபாடுதானே என்று அசால்டாக இருந்துவிட கூடாது அதற்கான உரிய சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என்றால் BP, ஹார்ட் அட்டாக், கருவுறாமை உள்ளிட்டவைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த பிரச்சனை நமக்கு உள்ளது என்பதை எப்படி உணருவது அப்படி என்று பார்த்தால், அதற்கு ஒரு சில அறிகுறிகள் உள்ளன. அதாவது irregular periods, முடி கொட்டுதல், எடை அதிகரிப்பு, தேவையில்லாத இடங்களில் முடி வளர்தல் ஆகியவைகள் தான். இந்த குறைபாட்டிலிருந்து மீண்டு வர பெண்களும் வீட்டில் ஒரு சில விஷயங்களை கடைபிடித்தால், விரைவில் pcod பிரச்சனை சரியாகி விடும்.

டிப்ஸ்:

  • முதலில் சின்ன உடற்பயிற்சிகளை செய்து வெயிட் குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
  • அடுத்து உணவு கட்டுப்பாடு, இது மிகவும் அவசியம். அதாவது இனிப்பு பண்டங்கள், பாஸ்ட் புட், உள்ளிட்டவைகளை தவிர்ப்பது நல்லது. இதை கடைபிடித்து வந்தால் pcod பிரச்சனையில் இருந்து மீள சிறந்த உதவியாக இருக்கும்.
  • முட்டையில் உள்ள வெள்ளைக் கரு, மீன்கள், கறி, பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை நாள் தோறும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
  • அரிசி உணவுக்கு பதிலாக கம்பு, கேழ்வரகு, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் எடுத்து கொள்வது நல்லது.
  • முளைகட்டிய பயறு, பருப்பு வகைகள், கடலை வகைகள் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து கொள்வது நல்லது.

சுட சுட “நாட்டு கோழி பிரியாணி” ரெடி.,, இதோ செய்முறை.,,try பண்ணி பாருங்க!!

மேற்சொன்னவைகள் சரியாக follow செய்து, மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டால் 4,5 மாதங்களில் pcod பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here