T20WC.., டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பீல்டிங் தேர்வு., இந்திய அணி அதிக இலக்கு நிர்ணயிக்குமா??

0

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

IND VS BAN

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 ஆட்டம் இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழையும் நோக்கில் களமிறங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மறுபுறம் பங்களாதேஷ் அணி இந்திய அணியை வீழ்த்தினால் நேரடியாக அரையிறுதிக்குள் நுழையும் கட்டத்தில் உள்ளனர். எனவே இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழையும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கேட்ச்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்(வ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

பங்களாதேஷ்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கேட்ச்), அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹொசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், நூருல் ஹசன்(w), முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது.

  • நேரம்: பிற்பகல் 1.30 PM
  • நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

டாஸ்:

பங்களாதேஷ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்ய மைதானத்தில் கால் பதித்துள்ளது. எனவே இந்த போட்டியில் எந்த அணி வெற்றி வாகை சூடுவார்கள் என பொறுத்திருந்து தெரிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here