சுட சுட “நாட்டு கோழி பிரியாணி” ரெடி.,, இதோ செய்முறை.,,try பண்ணி பாருங்க!!

0
சுட சுட
சுட சுட "நாட்டு கோழி பிரியாணி" ரெடி.,, இதோ செய்முறை.,,try பண்ணி பாருங்க!!

என்னதான் சிக்கன் விதவிதமா செஞ்சு சாப்பிட்டாலும் நாட்டுக்கோழி சுவைக்கு ஈடு ஆகுமா?? ஏனென்றால் நாட்டுக் கோழியில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்நிலையில் ருசியான “நாட்டுக்கோழி பிரியாணி” செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • நாட்டுக்கோழி – 1/2 கிலோ
  • பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
  • எண்ணெய் – தேவையான அளவு
  • ப்ரிஞ்சி இலை -2
  • பட்டை – சிறிதளவு
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • அன்னாசிப்பூ – 2
  • சோம்பு- 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 4
  • தக்காளி – 3
  • பச்சை மிளகாய் -5
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்( காரத்திற்கேற்ப)
  • பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • கரம் மசாலா- 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி, புதினா – அரை கட்டு
  • எலுமிச்சை பழம் – பாதி
  • நெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து காயவிடவும், பின்னர் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, ப்ரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், பின் பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ஆனதும் தக்காளி, பச்சை மிளகாய் , இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும், பச்சை வாசனை போன பின் பிரியாணி மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். ஒரு 3 நிமிடம் கழித்து, சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழி கறி துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.

கண்ணம்மா ஆர்பாட்டதால் உடையும் டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., முடிவடையும் பாரதி கண்ணம்மா சீரியல்!!

மசாலா கறி துண்டுகளின் உள்ளே இறங்கும் வரை கிளறிய பின், கழுவி வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து, அரிசிக்கு ஏற்ப தண்ணீர் ஊற்ற வேண்டும் (1 டம்ளர் அரிசி = 1 1/2 டம்ளர் தண்ணீர்). இதையடுத்து 2 அல்லது 3 விசில் வந்தவுடன் அடுப்பை off செய்துவிட வேண்டும். அரை மணி நேரம் கழித்து குக்கர் மூடியை திறந்து அதன் மீது பாதி எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவினால் சுவையான நாட்டுக்கோழி பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here