பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இந்த கதாபாத்திரம் கிடையாது.., வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இந்த கதாபாத்திரம் கிடையாது.., வெளியான திடுக்கிடும் தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி இந்த கதாபாத்திரம் கிடையாது.., வெளியான திடுக்கிடும் தகவல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல ட்விஸ்டுகளுடன் நடந்து வருகிறது. கதிர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சூடு பிடிக்க தொடங்கிய கதைக்களத்தில் மல்லி என்ட்ரி கொடுத்ததால் இன்னும் சுவாரஸ்யமாகவே நகரத் தொடங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஒருபுறம் அண்ணன் தம்பிகள் வீட்டை விற்க எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் மல்லி ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வந்தார். மறுபுறம் கதிரிடம் ஹோட்டல் பிசினஸில் உன்னால் ஒன்னும் பண்ண முடியாது என சவால் விட்டிருந்தார். இதனால் இந்த சவாலில் வெற்றி பெறுவாரா?? மாட்டாரா?? என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் கதிர் ஹோட்டல் பிசினஸில் பல ட்ரிக்ஸ்களை யோசிச்சு லாபம் எடுத்து மல்லியிடம் போட்ட சவாலில் வெற்றி பெற்றார். அதன் பிறகு மல்லி இடம்பெறும் காட்சிகள் சீரியலில் குறைய தொடங்கிவிட்டது. இந்நிலையில் கதிர், முல்லை இருவரும் சமையல் போட்டியில் 10 லட்சத்தை வெற்றி பெற்று எப்படியாவது குடும்பத்துடன் சேர வேண்டும் என ஆசையில் உள்ளனர்.

கண்ணம்மா ஆர்பாட்டதால் உடையும் டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., முடிவடையும் பாரதி கண்ணம்மா சீரியல்!!

இதனால் இனி வரும் எபிசோடுகளில் இவர்கள் 10 லட்சத்தை வெற்றி பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சமாளித்து விடுவார்கள். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒற்றுமையாக வாழ இருக்கும் நிலையில் இனிமேல் மல்லி கதாபாத்திரத்திற்கு வேலை இருக்காது. இதனால் அடுத்து வரும் காட்சிகளில் மல்லிக்கு வேலை இருக்காது என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here