எலான் மஸ்கின் அடுத்த திட்டம்.,அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! ஷாக்கான ஊழியர்கள்!!

0
எலான் மஸ்கின் அடுத்த திட்டம்.,அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! ஷாக்கான ஊழியர்கள்!!
எலான் மஸ்கின் அடுத்த திட்டம்.,அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! ஷாக்கான ஊழியர்கள்!!

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்திய எலான் மஸ்க், அடுத்ததாக தங்கள் ஊழியர்கள் குறித்த அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதிரடி முடிவு:

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 3.62 லட்சம் கோடி கொடுத்து முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் கையகப்படுத்தினார். இவர் கைக்கு அதிகாரம் மாறியதும் உடனடியாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவான பராக் அகர்வால் என்பவரை உடனடியாக பதவி நீக்கம் செய்தார். அவரோடு சேர்த்து பல முக்கிய அதிகாரிகளையும், ட்விட்டரில் இருந்து வெளியேற்றினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது ஒரு புறம் இருக்க, ட்விட்டரில் ப்ளூ டிக் உள்ள அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்போரிடம் மாதந்தோறும் ரூபாய் 1600 வசூலிக்க முடிவு செய்துள்ளதாக அண்மையில் அறிவித்தார். இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுத்து வந்த எலான் மஸ்க், தற்போது மீண்டும் ஒரு திட்டம் வகுத்துள்ளார்.

தமிழக VIPகளுக்கு ஜாக்பாட் – 45,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! முன்னணி நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!!

அதாவது, தனது டெஸ்லா நிறுவனத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களை சிபிஎன்சியில் பணிபுரிய அனுமதித்துள்ளார். இவர்களில் டெஸ்லாவின் மென்பொருள் மேம்பாட்டு இயக்குனர் அசோக் எல்லு சாமி, ஆட்டோ பைலட் இயக்குனர் மிலான் கோவாக், சாப்ட்வேர் இன்ஜினியரிங் மூத்த இயக்குனர் மகா விருதுஹகிரி உள்ளிட்ட பலர் அடங்குவர். இப்படி, அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரியாமல் ஊழியர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here