30 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டேக் – பேடிம் நிறுவனம் புதிய மைல்கல்

0
Paytm Fastag

சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், பணமில்லா சுங்கக்கட்டணம் பரிவர்த்தனைக்காகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் முறையை கடந்த 2019 டிச.1 ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவந்தது. இது வங்கிகள் வாயிலாக மட்டுமின்றி பேடிம் நிறுவனம் வாயிலாகவும் வழங்கப்படுகிறது.

பாஸ்டேக் அப்படினா??

பாஸ்டேக் முறையில் பணமில்லா பரிவர்த்தனையில் சேர்ந்துள்ளவர்களுக்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் வண்டியின் முன்புற கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கர் சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் சென்சார் மூலம் உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு அதற்க்கான சுங்கக்கட்டணம் அவரது வங்கி / பேடிம் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை.

பேடிம் நிறுவனம் அபாரம்

நாட்டிலேயே இதுவரை 30 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்கி பேடிம் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் இதனை வரும் மார்ச் மாதத்திற்குள் 50 லட்சம் ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிய வாகனங்களை வாங்குவோருக்கு உடனுக்குடன் ‘பாஸ்டேக்’ வழங்குவதற்கு மாருதி சுசூகி ஹூண்டாய் ஹோண்டா கியா எம்.ஜி. மோட்டார் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே பேடிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இரு மடங்கு கட்டணம்

இந்நிலையில் பாஸ்டேக் விண்ணப்பிக்காத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இரு மடங்கு கட்டணம் இன்று முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here