பவன் கல்யாண் படத்தின் ட்ரைலரை காண அதிரடியில் இறங்கிய ரசிகர்கள் – ட்ரைலருக்கே இப்படியா??

0

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரைலரை காண அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் கண்ணாடியை உடைத்து அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் பவன் கல்யாண்

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வக்கீல்சாப்’. தமிழில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மறுதயாரிப்பு தான் தெலுங்கில் வக்கீல்சாப் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வக்கீல் வேடத்தில், தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி நடித்துள்ள கதாப்பாத்திரத்தில் நடிகைகள் அஞ்சலி, நிவேதிதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் ட்ரைலரை காண இரண்டாயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்குகளின் முன்னால் குவிந்தனர்.

விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்குபெறும் நகைச்சுவை திருவிழா – தெறிக்கவிடும் ப்ரோமோ!!

படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பு செய்யப்படும் நேரத்தில் திரையரங்குகளின் முன்னால் கூடி இருந்த அனைத்து ரசிகர்களும் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். சில ரசிகர்கள் திரையரங்குகளின் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே செல்ல முயற்சித்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ரசிகர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் மக்கள் எவ்வித பயமும் இல்லாமல் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவது வேதனையை தருகிறது என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here