ஏப்ரல் 1 முதல் வங்கிகளின் காசோலை செல்லாது – மக்களே உஷார்!!

0

வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் சில வங்கிகளின் காசோலை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கீழே குறிப்பிடும் வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள்:

கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் அதில் அவர் அறிவித்த ஓர் திட்டம் பல சர்ச்சைகளை கிளப்பியது. அது என்னவென்றால் பொதுத்துறை வங்கிகளை தனியாருடன் இணைப்பது. இதற்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Digital bank account sparks off a disruption

மேலும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர் வங்கி ஊழியர்கள். இதனால் பொதுத்துறை வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சில வங்கிகளின் காசோலை வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதியுடன் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சபாநாயகரின் கார் விபத்து – எதார்த்தமா??சதியா??

மத்திய அரசு அறிவித்த பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டத்தின்படி ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்படவுள்ளது. எனவே அந்த இரண்டு வங்கிகளின் காசோலை, பாஸ்புக் முதலியவற்றை செல்லாது.

அதேபோல் போல கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய இரண்டு வங்கிகள், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் மற்றும் தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணையவுள்ளது. இதனால் மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் வங்கிகளை அணுக அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here