விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்குபெறும் நகைச்சுவை திருவிழா – தெறிக்கவிடும் ப்ரோமோ!!

0
vta

விஜய் டிவியின் ஆறாவது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி பல நகைச்சுவை விருந்துகளுடன் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

டெலிவிஷன் விருது

விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கான டெலிவிஷன் விருதுகள் வழங்கப்படவுள்ளது. ஆறாவது முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறந்த தொடர்களுக்கான விருது வழங்கும் விழா இந்த வாரம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக விஜய் டெலிவிஷன் விருதுகளுக்கான சிறப்பு முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்த சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் படி கடந்த மூன்று வாரங்களாக விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பரிவட்டம், எங்க வீட்டு மகாலட்சுமி ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன்படி இந்த வாரம் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்குபெறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.

‘என்ன ஆத்மீகா நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க’ – வைரலாகும் புகைப்படங்கள்!!

அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, மாகபா ஆனந்த், டிடி, மணிமேகலை, கோபிநாத், அர்ச்சனா ஆகியோருடன் புகழ், ரக்சன், ரியோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளார். பல நகைச்சுவை காட்சிகளுடன் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சிங்கம்’ என்று பெயர் வைத்துள்ளனர். விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியின் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாதலால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.

விஜய் டெலிவிஷன் விருதுகளுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியின் கடைசி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக போகிறது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here