பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 500 நாட்களே…, கவுண்ட்டவுனை அறிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி!!

0
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 500 நாட்களே..., கவுண்ட்டவுனை அறிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 500 நாட்களே..., கவுண்ட்டவுனை அறிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி!!

2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்க்கான கவுண்ட்டவுனை பிரான்ஸ் ஜனாதிபதி தொடங்கி உள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்:

உலக அளவிலான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2020 ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றன. 206 நாடுகள் பங்கு பெற்ற இந்த ஒலிம்பிக்கில், இந்தியா, ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 7 பதக்கங்களை பெற்று 48 வது இடத்தை பிடித்திருந்தது. இந்த பதக்கங்கள் இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கு விக்க பெரும் துண்டு கோலாக மாறி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், அடுத்த சீசனை எதிர்நோக்கி உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் தற்போதிலிருந்தே தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் தொடரின் அடுத்த சீசனுக்கான கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அடுத்த வருடம் (2024ல்) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ம் தேதி முதல், ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தில் நடந்த ரிஷப் பண்ட்…, உடல்நிலை குறித்து வெளியிட்ட நீயூ அப்டேட்!!

இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு இன்னும் 500 நாட்களே, இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். எதிர்வரும் இந்த ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவில் உள்ளிட்ட நாடுகளில் நேரடியாக ஒளிபரப்புவதற்காக Viacom18 Media Private Limited ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here